கோவை சிறுதுளி அமைப்பு சேரோநகரில் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்து திறப்பு

கடந்த 23 ஆண்டுகளாக கோவையை பசுமை நகரமாக மாற்றும் சேவையில் ஈடுபட்டு வரும் சிறுதுளி அமைப்பு, கோவை அருகே உள்ள சேரோநகர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைத்து திறந்து வைத்துள்ளது.
சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் மற்றும் அதன் தலைவர் திரு. அனில் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. பி. சரவணன், IAS, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏரியை திறந்து வைத்தார்.


நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சிறுதுளி அமைப்பு, இதற்கு முன் பல ஏரிகள் மற்றும் குளங்களை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது சேரோநகர் ஏரியும் முழுமையாக சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.


ஏரியின் நீர்த்தேக்க திறனை அதிகரிக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கரைகள் பலப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மரக்கன்றுகள் நடுதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், தொழில்துறையினர், சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


சிறுதுளி அமைப்பின் இந்த முயற்சி கோவையின் நீர்வள பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றும் என பாராட்டப்பட்டுள்ளது.

Scroll to Top