
தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.