கோவை பீளமேடு மற்றும் ஹோப் கல்லூரி பகுதிகளில் இரயில்வே மேம்பாலம் தொடர்பான இரும்பு பாலம் அமைக்கும் பணி இன்று (ஜூலை 9) முதல் தொடங்கியுள்ளது. இதனால், சில முக்கிய இரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
ஜூலை 10 முதல் 13 வரை:
-
16316 – திருவனந்தபுரம் – மைசூரு விரைவு இரயில்
-
22503 – கன்னியாகுமரி – திப்ரூகர் விரைவு இரயில்
இவை போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படுவதால், கோவை இரயில் நிலையம் வழியாக செல்லாது. போத்தனூர் இரயில் நிலையம் கூடுதல் நிறுத்தமாக செயல்படும்.
மேலும்:
-
ஜூலை 12 – 16317: கன்னியாகுமரி – வைஷ்ணோதேவி கட்ரா
-
ஜூலை 13 – 22669: எர்ணாகுளம் – பாட்னா
இந்த இரயில்களும் கோவை நிலையம் தவிர்த்து, மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
அதேபோல்:
-
16187 – காரைக்கால் – எர்ணாகுளம்
-
நீலகிரி விரைவு இரயில் – சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம்
-
18567 – ஜூலை 11: விசாகப்பட்டினம் – கொல்லம்
இவை அனைத்தும் இருகூர் – போத்தனூர் வழியாகவே செல்லும்.
பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள இரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.