கோவை – ராஜஸ்தான் மதார் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்!!

கோவையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் மதார் ரயில் நிலையத்துக்கு நவம்பர் 13 முதல் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06181 கோவையிலிருந்து இயக்கப்படும்.

இந்த ரயில் ராஜஸ்தான் மதார் நிலையத்தை நவம்பர் 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமைகளில்) பிற்பகல் 11.20 மணிக்கு சென்றடையும்.

மறுமுனையில் ரயில் எண் 06182 மதார் நிலையத்திலிருந்து நவம்பர் 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு புறப்படும்.

இது நவம்பர் 20, 27 மற்றும் டிசம்பர் 9 ஆகிய வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு கோவையை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களில் ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 7, ஏசி மூன்றடுக்கு பொருளாதாரப் பெட்டிகள் 4, படுக்கை வசதியுள்ள பெட்டிகள் 7, சரக்கு வேன்கள் 2 இடம்பெற்றுள்ளன.

திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Scroll to Top