கோவை – போத்தனூர் ரயில் சேவையில் மாற்றம்

கோவை – போத்தனூர் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தற்காலிக சேவை மாற்றங்கள்:

  • கண்ணூர் – கோவை (16607) எக்ஸ்பிரஸ் – ஆகஸ்ட் 22 மற்றும் 26 தேதிகளில், பாலக்காடு ரயில்வே நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • மேட்டுப்பாளையம் – போத்தனூர் (66615) மெமு ரயில் – கோவை ரயில்வே நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • கோவை – மதுரை (16721) எக்ஸ்பிரஸ் – கோவை நிலையத்திற்கு பதிலாக பொள்ளாச்சி நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். கோவை – பொள்ளாச்சி இடையே இயக்கப்படாது.
  • போத்தனூர் – மேட்டுப்பாளையம் (66616) மெமு ரயில் –    போத்தனூருக்கு பதிலாக கோவை ரயில்வே நிலையத்தில் இருந்து  மாலை 3.45 மணிக்கு புறப்படும். கோவை – போத்தனூர் இடையே  இயக்கம் இருக்காது.
Scroll to Top