கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

வேலை தேடும் இளைஞர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் நடத்தும் பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம், ஆகஸ்ட் 23 காலை 8:00 மணிக்கு ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

  • உற்பத்தி, ஜவுளி, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., ஆட்டோமொபைல், விற்பனை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முன்னணி 270 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும்.
  • 8ம் வகுப்பு முதல் முதுகலை, தொழில் கல்வி, பொறியியல், செவிலியர் உள்ளிட்ட அனைத்து தகுதியும் பெற்றவர்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை, அனுமதி இலவசம்.
  • பங்கேற்போர் தங்கள் சுயவிபரம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் வர வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.

முகாமில் குறிப்பாக நர்சிங் துறையில் அதிகளவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Scroll to Top