Education

Education, News

துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஜூலை 31) www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியீடு. விடைத்தாள் நகல் கோர விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ரூ.275 கட்டணத்துடன் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நகல் பெற்றவர்களுக்கே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும்.

Education, News

தேர்வு அட்டவணை வெளியீடு!!

2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்.18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது: டிச.15ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23ம் தேதியுடன் நிறைவடைகிறது என அறிவிப்பு.

Education, News

பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்

சித்தா ஆயுர்வேத யுனானி ஒமியோபதி (பிஎஸ்எம்எஸ்), பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் பட்டப்படிப்புகளுக்கு 2025–26 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய நகல்களுடன் ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் – ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை -600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இதை தவிர்த்து, விண்ணப்ப பதிவு செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணி வரை என்பதையும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Scroll to Top