Deepam 2025

Deepam 2025, News

திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.

Deepam 2025, News

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 நிறைவு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025, இன்று (07.12.2025) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.

Deepam 2025, News

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (06.12.2025) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Deepam 2025, News

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் கிரிவலம்!

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் இன்று (05.12.2025) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Deepam 2025, News

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 03 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (04.12.2025) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

Deepam 2025, News

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – பத்தாம் நாள் இரவு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் நாள் இரவு நேற்று (05.12.2025) பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

Deepam 2025, News, Spiritual News

அண்ணாமலையாருக்கு அரோகரா! திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் (03.12.2025 ) மாலை 06.00 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. “அரோகரா” முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசித்தனர்.

Deepam 2025, News

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஒன்பதாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (02.12.2025) இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Deepam 2025, News, Spiritual News

பரணி தீபம் ஏற்றப்பட்டது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த, 24 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03ம் தேதி, பஞ்ச பூதங்கள்,என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Deepam 2025, News

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஒன்பதாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (02.12.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Scroll to Top