
பயணிகளின் வசதிக்காக கோவை – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 28, அக்டோபர் 5 ,அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும் என்றும் சென்னை சென்ட்ரல் – கோவை சிறப்பு ரயில் (எண்: 06033) செப்.29, அக்.6, 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்படும்.
இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.24) முதல் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.