கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைப்பு கல்லூரியிலும் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி ஜூலை 15 வரை ஆன்லைனில் நடைபெறும். 7.5% இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.